தேர்தலை நடத்துவதற்கு நாம் அஞ்சவில்லை! – இராஜாங்க அமைச்சர் சொல்கின்றார்

Share

“உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு நாங்கள் அஞ்சவில்லை. தேர்தலை நடத்தாமல் விட்டால் அதிக பாதிப்பு எங்களது கட்சிக்குத்தான். 2018 தேர்தலில் அதிக சபைகளைக் கைப்பற்றியது நாங்கள்தான்.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரும் இராஜாங்க அமைச்சருமான ஜானக வகும்புர தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“ரணில் விக்கிரமசிங்க பிரதமரான போதும் சரி, ஜனாதிபதியான போதும் சரி எதிர்க்கட்சிகளைச் சேர்ந்து செயற்படுவதற்கு அழைப்பு விடுத்தார். தொடர்ந்து அழைப்பு விடுகின்றார்.

சிலர் அந்த அழைப்பை ஏற்று அரசுடன் இணைந்தனர். சிலர் அரசுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவிக்கின்றனர்.

தற்போது வெளிநாட்டு சுற்றுலாவாசிகள் வரத் தொடங்கியுள்ளனர். அதைக் கெடுத்துக்கொள்ள முடியாது.

பொருட்களின் விலைகள் குறைந்து கொண்டு செல்கின்றன. தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. டொலரின் பெறுமதி குறைந்துள்ளதால் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர்.

தேர்தலை நடத்துவதற்கு நாங்கள் அஞ்சவில்லை. தேர்தலை நடத்தாமல் விட்டால் அதிக பாதிப்பு எங்களது கட்சிக்குத்தான்.

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அதிக சபைகளைக் கைப்பற்றியது நாங்கள்தான்.

அதுமட்டுமா, மாகாண சபைத் தேர்தல் நடத்தாமல் இருப்பதால் அதிலும் எங்களுக்கே நட்டம். அதிகமான முதலமைச்சர்களும் அமைச்சர்களும் உறுப்பினர்களும் எங்களது கட்சியைச் சேர்ந்தவர்கள். அவர்களை நாம் இழந்துள்ளோம். எல்லோரும் இப்போது வீட்டில்” – என்றார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு