தேர்தல் ஒத்திவைப்பு; மக்கள் கொந்தளிப்பு! – ஜனாதிபதிக்குக் கடிதம்

Share

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டமை மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே திட்டமிட்டபடி உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது அரசின் பொறுப்பு என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவது என்பது சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலின் மூலம் மக்களின் இறையாண்மையை உறுதி செய்வதே நடைமுறையாகும் என்று ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தேரர்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் சட்டக் கட்டுப்பாடுகளுக்குள் மக்கள் பேச்சு சுதந்திரம் பெற வேண்டும்.

சட்டத்தின் ஆட்சியை உறுதிசெய்து, வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதன் மூலம் மக்கள் மத்தியில் இயல்பு நிலையையும் அமைதியையும் மீட்டெடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் தேரர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்தி, மக்கள் நலக் கொள்கைகளை அமுல்படுத்தவும், மக்களின் உயிரைப் பாதுகாக்கவும் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதேவேளை, இந்த இக்கட்டான தருணத்தில் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த அனைத்து தரப்புகளும் தங்கள் கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று தாம் உறுதியாக நம்புவதாகவும் மகாநாயகர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு