கண்டி, மாபானாவத்துர பகுதியிலுள்ள வீடொன்றில் பிரபல நடிகை ஒருவரின் ஊடாக இயங்கி வந்ததாகக் கூறப்பட்ட விபசார நிலையத்தை கண்டி குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழு சுற்றிவளைத்துள்ளனர்.
இந்தச் சுற்றிவளைப்பில் நான்கு யுவதிகள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரபல சினிமா நடிகை ஒருவரால் விபசார நிலையம் நடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும், குறித்த நடிகைக்கு இதில் நேரடித் தொடர்பு இருப்பதாக உறுதி செய்யப்படவில்லை என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
குறித்த வீட்டை வாடகைக்கு எடுத்த நபர் ஒருவர் அங்கு விபசார நிலையத்தை நடத்தி வந்துள்ளார் என்று பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஒருவரிடம் பல கஞ்சா பைக்கற்றுக்களைப் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 7 பேரும் கண்டி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.