உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்குப் பொருத்தமான திகதி ஏப்ரல் 25 என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ள போதிலும் அதற்கு நிதி வழங்குவது தொடர்பில் நிதி அமைச்சு இன்னும் பச்சைக் கொடி காட்டாததால் தேர்தல் மேலும் ஒத்திவைக்கப்படலாம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேர்தலை நடத்துவதற்கான நிதியைத் தேர்தல்கள் ஆணைக்குழு பல தடவைகள் நிதி அமைச்சிடம் கேட்டுவிட்டது. எந்தப் பதிலும் இல்லை.
நிதி அமைச்சர் என்ற வகையில், இந்த நிதியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கேட்பதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்குப் பணமில்லை என்று கூறி வரும் ஜனாதிபதி இந்த நிதியைக் கொடுப்பது சந்தேகமே. இதனால் உள்ளூராட்சி சபைத் தேர்தல் மேலும் ஒத்திவைக்கப்படலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகின்றது.