மேல் மாகாணத்தில் தவணைப் பரீட்சைகள் ஒத்திவைப்பு!

Share

மேல் மாகாணத்தில் நாளை (15) நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த சில தரங்களுக்கான தவணைப் பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன.

மேல் மாகாண கல்வித் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 9, 10 மற்றும் 11ஆம் தரங்களுக்கான, தவணைப் பரீட்சை இவ்வாறு பிற்போடப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த பரீட்சைகள் எதிர்வரும் 21 மற்றும் 22ஆம் திகதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண கல்வித் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

நாளை ஆசிரியர் சங்கத்தினர் பணிப்புறக்கணிப்புக்கு ஆயத்தமாகும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு