தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான பெண் ஒருவருக்கு, போலி ஆவணங்களுடன் வெளிநாடு செல்வதற்கு உதவினார் எனக் கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரைப் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த குறித்த விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர், வெள்ளவத்தையில் உள்ள முகவரியில் போலி ஆவணங்களை உருவாக்கி வெளிநாடு செல்வதற்குச் சந்தேகநபரான கான்ஸ்டபிள் உடந்தையாக இருந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், வெளிநாடு சென்று மீண்டும் நாடு திரும்பிய போது கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரான கான்ஸ்டபிள் கொழும்பு – வாழைத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியவர் எனவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.