ஏற்கனவே திட்டமிட்டவாறு இம்மாதம் (மார்ச்) 9 ஆம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படாமையால், அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளது என்று தீர்ப்பளிக்குமாறு கோரி, உயர்நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் விசேட வைத்தியர் நிஹால் அபேசிங்க, கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி ஆகியோர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.
நிதி அமைச்சின் செயலாளர், சட்டமா அதிபர், அரச அச்சகர், காவல்துறைமா அதிபர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், பிரதமர் உட்பட அமைச்சரவையின் 35 உறுப்பினர்களும், இந்த மனுவின் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.