டொலரின் பெறுமதிக்கு ஏற்றவாறு எதிர்வரும் நாட்களில் எரிபொருள் விலை குறைவடையும் என்று சபை முதல்வரான அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சர்வஜன வாக்குரிமை தொடர்பான இரண்டாம் நாள் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“சில விடயங்களில் நாங்கள் பொறுமையாகச் செயற்பட வேண்டும். பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளமையால் நாம் பெறும் சம்பளம் போதுமானதாக இருக்காதுதான். ஆனால், தற்போதைய நிலைமையில் பொருட்களின் விலைகள் மீண்டும் குறைவடையும்.
எரிபொருள் விலையும் எதிர்வரும் நாட்களில் குறைவடையும். அடுத்ததாக இறக்குமதி செய்யப்படும் எரிபொருள் டொலரின் பெறுமதிக்கு ஏற்றால் போன்று இறக்கப்படும். இதன்போது விலை குறைவடையும். இது மக்களுக்குக் கிடைக்கும். அதேபோன்று எதிர்வரும் ஜுன் மாதமளவில் மின் கட்டணமும் குறைவடையும் என்று மின்சக்தி அமைச்சர் கூறியுள்ளார்.
தற்போது டொலர் பெறுமதி குறைவடைகின்றது. பணவீக்கமும் குறைவடையும். பொருளாதாரம் தொடர்பில் முன்னெடுத்த வேலைத்திட்டங்களே இதற்குக் காரணமாக அமைந்துள்ளது” – என்றார்.