வவுனியா, குட்செட் வீதியில் இரு சிறுமிகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டிலிருந்து சடலங்களாக மீட்கப்பட்டிருந்தனர். அவர்களது இறுதிச்சடங்குகள் பலரது கண்ணீருக்கு மத்தியில் இன்று இடம்பெற்றது.
இந்தச் சம்பவத்தில் குடும்பஸ்தர் தூக்கில் தொங்கிய நிலையிலும், ஏனையவர்கள் படுக்கையில் உறங்கியபடியும் சடலங்களாக அவதானிக்கப்பட்டனர்.
சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். சடலங்களைப் பார்வையிட்ட வவுனியா நீதிவான் அதனை உடற்கூற்று ஆய்வுக்கு உட்படுத்துமாறு பொலிஸாருக்குப் பணித்திருந்தார்.
உடற்கூற்று பரிசோதனையின் முடிவுகள் முழுமையாக வெளியாகாத நிலையில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்நிலையில் குறித்த நால்வரதும் இறுதிச்சடங்குகள் நூற்றுக்கணக்கான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் குட்செட்வீதி உள்ளக வீதியில் அமைந்துள்ள அவர்களது இல்லத்தில் இடம்பெற்றது. வெளிக்குளம் மயானத்தில் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டன.