43 வயது மணமகளுக்குச் செலவளித்த பணத்தைக் கேட்டு 48 வயது மணமகன் முறைப்பாடு!

Share

மணமகள் பார்ப்பதற்காக, அவரின் வீட்டுக்குச் சென்றபோது, வாங்கிச் சென்ற பொருட்களுக்குச் செலவிட்ட பணத்தை மீளத் தரும்படி கோரி, பொலிஸ் நிலையத்தில் மணமகன் முறைப்பாடு செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதான நபரே மினுவாங்கொடைப் பொலிஸ் நிலையத்தில் இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளார்.

சம்பந்தப்பட்ட மணப்பெண் மினுவாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதானவராவர். இவரது பெற்றோர் தங்களது மகளுக்குத் தகுதியான மணமகனைத் தேடி பத்திரிகை ஒன்றில் விளம்பரம் செய்திருந்தனர்.

விளம்பரத்தைப் பார்த்த முறைப்பாட்டாளர் உறவினர்களுடன் பெண் பார்க்க அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார். அதன் பின்னரும் நான்கு தடவைகள் பெண் வீட்டுக்குச் சென்றுள்ளார். பெண் வீட்டுக்குச் செல்லும் சந்தர்ப்பங்களில் அவர் கேக், வாழைப்பழம் உட்பட மேலும் சில பொருட்களை எடுத்துச் சென்றுள்ளார்.

இப்படி இருக்கும் போது 43 வயதான மணமகள், 48 வயது மணமகனைத் தனக்குப் பிடிக்கவில்லை எனப் பெற்றோர் மூலம் தெரியப்படுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமுற்ற நபர், மணமகள் வீட்டுக்குச் சென்ற போது வாங்கிச் சென்ற பொருட்களுக்குச் செலவிட்ட பணத்தை மீளப் பெற்றுத் தரும்படி மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

பொலிஸார் மணமகள் வீட்டாரையும் பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணைகளை மேற்கொண்டனர். அப்போது மணமகள் வீட்டார் பெண் பார்க்க வந்த போது அவர்களை உபசரிக்கச் செலவிட்ட பணத்தை மீளப் பெற்றுத் தரும்படி தெரிவித்து பணம் வழங்க மறுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு