கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஐந்து பேருக்குக் கேகாலை மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனையை விதித்தது.
2014ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைக் குற்றம் தொடர்பிலேயே இந்தத் தண்டனை இன்று வழங்கப்பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் திகதி கேகாலை, தெவலகம, கஹகல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது ஒருவரைத் தாக்கி கொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டு, குறித்த ஐவருக்கும் எதிராகச் சுமத்தப்பட்டிருந்தது.