நாட்டில் பாணின் விலையைக் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், 450 கிராம் (ஒரு இறாத்தல்) நிறையுடைய பாணின் விலையை 10 ரூபாவால் குறைக்கத் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, பாண் தற்போது 180, 190 மற்றும் 200 ரூபா ஆகிய வெவ்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.