அரசின் வரிக்கொள்கைக்கு எதிராக நாளை 9 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை ஒரு வாரத்துக்கு நாடு முழுவதும் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கத் தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க ஒன்றியம் தீர்மானித்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஒன்றிணைந்த சந்திப்பின் போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், அரச வைத்திய அரிகாரிகள் சங்கம் உள்ளிட்ட 40 தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.