அரசுடன் இணையும் எண்ணம் இல்லையாம்! – ராஜித கூறுகின்றார்

Share

“தற்போது அரசுடன் இணைவதற்கான எந்தத் திட்டமும் என்னிடம் இல்லை.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

தேசிய அரசு தொடர்பான பேச்சின் போது ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசுடன் இணைய விருப்பம் தெரிவித்திருந்த ராஜித எம்.பி., இன்று ஊடகம் ஒன்றிடம் இவ்வாறு கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசில், அவர் கடந்த காலங்களில் வகித்து வந்த சுகாதார அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளது என வெளியான செய்திகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே ராஜித எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க ஜனாதிபதியின் அண்மைக்கால வேலைத்திட்டம் உள்ளிட்ட திட்டங்களைப் பாராட்டி ராஜித எம்.பி. வெளியிட்ட சில அறிக்கைகளால் அவரது கட்சியின் மூத்த உறுப்பினர்களின் விமர்சனத்தை எதிர்நோக்கினார்.

மேலும் சுகாதார அமைச்சர் போன்ற ஒரு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டால், நிலவும் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதில் முக்கிய பங்காற்ற முடியும் என கடந்த வாரம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ராஜித எம்.பி. தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு