கொட்டகலையில் தீ விபத்து! – மூன்று கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் நாசம் (Photo)

Share

நுவரெலியா மாவட்டம், கொட்டகலை நகர பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் தளபாடக் கடைத் தொகுதியும், வீடும் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தத் தீ விபத்து நேற்றிரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது என்று பிரதேசவாசிகள் கூறினர்.

திம்புள்ளை – பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை – வூட்டன் பசார் பகுதியில் வீதிக்கு அருகாமையில் உள்ள ஒரே கட்டடத்தில் அமையப்பெற்றுள்ள தளபாடக் கடை மற்றும் வீடு ஆகியன முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளன.

திம்புள்ளை – பத்தனைப் பொலிஸார் மற்றும் பிரதேச பொதுமக்கள், நுவரெலியா மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர், கொட்டகலை இராணுவத்தினர், இராணுவத்தின் தீயணைப்புப் பிரிவினர் ஆகியோர் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்தன. சுமார் 4 மணித்தியாலயங்களுக்குப் பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும், பொருட்கள் மற்றும் ஆவணங்கள் என அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன.

தீக்கிரையாகிய அனைத்தும் ஒரே உரிமையாளருக்குச் சொந்தமானவை எனவும், சம்பவம் இடம்பெற்ற வேளை உரிமையாளர் மற்றும் அவரின் மனைவி ஆகியோரே இருந்துள்ளனர் எனவும், எனினும் அவர்கள் எந்தவிதக் காயங்களும் இன்றி காப்பாற்றப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் மேலும் கூறினர்.

தீயினால் சுமார் 3 கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் எரிந்து சேதமாகியுள்ளன.

தீ ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் திம்புள்ளை – பத்தனைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு