சிறப்பாக நடந்தேறிய கச்சதீவு அந்தோனியார் திருவிழா (Photos)

Share

யாழ்., நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா சிறப்பாக நடைபெற்று நிறைவடைந்தது.

திருவிழா நேற்றுமுன்தினம் மாலை 4 மணிக்கு கொடியேற்றத்தோடு ஆரம்பமானது. அன்றிரவு விசேட ஆராதனையைத் தொடர்ந்து சுற்றுப்பிரகாரமும் இடம்பெற்றது.

திருவிழாவின் இரண்டாவது நாளான நேற்றுக் காலை 6 மணிக்கு திருச்செபமாலை நடைபெற்று, 6.30 மணிக்கு யாழ். ஆயர் மற்றும் அருட்தந்தையர்கள் வரவேற்கப்பட்டு 7 மணிக்கு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

திருப்பலி கொழும்பு மறை மாவட்டத்தின் துணை ஆயர் அருட்தந்தை அன்ரன் தில்லைநாயகம் மற்றும் யாழ். மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் இடம்பெற்றது.

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவில் 2 ஆயிரத்து 800 இலங்கை பக்தர்களும், 2 ஆயிரத்து 100 இந்திய பக்கர்களுமாக பக்தர்கள் 4 ஆயிரத்து 900 பேரும், வர்த்தகம் மற்றும் ஏனைய நடவடிக்கைகளுக்காக 200 பேர் என மொத்தமாக 5 ஆயிரத்து 100 பேர் வருகை தந்தனர் என்று அதிகாரபூர்வத் தகவல்கள் தெரிவித்தன.

கொரோனா காரணமாக கடந்த காலங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பக்தர்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு