“மலையக சிறார்களை வேலைக்கு அமர்த்தினால் கடும் நடவடிக்கை”

Share

சிறார்கள் மத்தியில் போதைப்பொருள் பரவுவதைத் தடுப்பது சம்பந்தமாகவும், பெருந்தோட்ட சிறார்களை வேலைக்கு அமர்த்துவதை தடுப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து அதிக கவனம் செலுத்துமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.பி. திஸாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.

இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடும் நபர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

சிறார்களை இலக்கு வைத்து சந்தையில் ஒரு வகையான பாக்கு இருப்பதாகவும், அது போதைப்பொருளாகக் குறிப்பிடப்படாவிட்டாலும், சிறார்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கக் கூடியது என்று பொலிஸ் அதிகாரி ஒருவர் கூட்டத்தில் குறிப்பிட்டார்.

இதனைக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

நுவரெலியா மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை இதுவரை 43 பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி இராமேஷ்வரன், நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட உள்ளிட்ட அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

 

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு