பூஜிதவின் மனுவை நிராகரித்தது உயர்நீதிமன்றம்!

Share

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தம்மைக் கட்டாய விடுமுறையில் அனுப்பியதை எதிர்த்து முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில், முன்னாள் பொலிஸ்மா அதிபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், இந்த மனுவைத் தொடர்ந்தும் முன்கொண்டுசெல்ல வேண்டிய அவசியமில்லை எனவும், அதனால் அதனை மீளப் பெற அனுமதிக்குமாறும் நீதிமன்றில் கோரியிருந்தனர்.

அதன்படி அந்தக் கோரிக்கையை ஏற்று மனுவைத் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுக்குப் பின்னர் தம்மைச் சட்டவிரோதமான முறையில் கட்டாய விடுப்பில் அனுப்பிய முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தீர்மானம் தனது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகவும், அந்தத் தீர்மானத்தை இரத்துச் செய்து உத்தரவு பிறப்பிக்கக் கோரியும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

 

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு