பஸ்ஸில் பயணித்த பயிலுநர் தாதி ஒருவரின் உடலை ஸ்பரிசம் செய்த குற்றச்சாட்டில் பிரதம பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று அளுத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை வலயத்துக்குட்பட்ட பொலிஸ் நிலையம் ஒன்றின் பலவின முறைப்பாடுகள் பிரிவின் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றும் 54 வயதுடைய பிரதம பொலிஸ் பரிசோதகரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பலாங்கொடை நோக்கிப் பயணித்த பஸ்ஸில் பயணித்த பயிலுநர் தாதிக்கு குறித்த பொலிஸ் அதிகாரி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார் என்று அந்தத் தாதி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, சக பயணிகள் குறித்த பொலிஸ் அதிகாரியை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
சந்தேகநபரை களுத்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அளுத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.