மைத்திரியின் மேன்முறையீடு தொடர்பான தீர்ப்பு மார்ச் முதலாம் திகதி!

Share

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு கோரி, தாக்கல் செய்துள்ள தமக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் நிராகரிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுவின் தீர்ப்பு எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலால் பாதிகப்பட்டுள்ளவர்கள் இழப்பீடு கோரி, கொழும்பு மாவட்ட நீதிமன்றில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக, வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

இந்தநிலையில், குறித்த வழக்கின் தீர்ப்பானது, மேல் மாகாண குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்தில், இன்று அறிவிக்கப்படவிருந்தது.

எவ்வாறாயினும், எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி வரையில் குறித்த வழக்கின் தீர்ப்பு பிற்போடப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டது.

தாக்குதலைத் தடுப்பதற்குப் போதுமான தகவல்கள் கிடைக்கப் பெற்றிருந்த போதிலும், அதற்கான உரிய நடவடிக்கை எடுக்காமைக்காக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக, பாதிக்கப்பட்டவர்கள் கொழும்பு மாவட்ட நீதிமன்றில் 108 வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு