சம்பளமற்ற விடுமுறையைப் பெற்றுக்கொண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்வந்துள்ள அரச ஊழியர்கள், தேர்தல் ஒத்திப்போடப்பட்டால் மூன்று மாதங்கள் வரை சேவைக்குச் சமுகமளிக்க முடியாது என்று பொதுநிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஒத்திப்போடப்பட்டாலும் வேட்புமனு தாக்கல் செய்த தினத்திலிருந்து மூன்று மாதங்கள் நிறைவுறும் வரை வேட்பாளர் சம்பளமற்ற விடுமுறையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டு மூன்று மாதங்கள் நிறைவடைந்த பின்னர் அவ்வாறு தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ள அரச ஊழியர்கள் மீண்டும் தாம் முன்பு கடமை புரிந்த நிறுவனத்துக்குச் சேவைக்காக சமுகமளிக்க வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சுமார் 3 ஆயிரம் அரச ஊழியர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.