தமிழ், சிங்கள எழுத்துக்கள் நூல்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு (Photo)

Share

அரச கரும மொழிகள் திணைக்களத்தால் தொகுக்கப்பட்ட ‘சிங்கள எழுத்துக்கள்’ மற்றும் ‘தமிழ் எழுத்துக்கள்’ ஆகிய இரண்டு நூல்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கும் நிகழ்வு நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

பெப்ரவரி 21ஆம் திகதி சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு பிரதமர் தினேஷ் குணவர்த்தனவால் இந்த நூல்கள் ஜனாதிபதிக்கு வழங்கி வைக்கப்பட்டன.

சபாநாயகர் உட்பட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்த நூல்களை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனும் கலந்துகொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு