தேர்தலுக்கு நிதி வழங்காமைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி வழக்கு!

Share

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு, நிதி வழங்காமைக்கு எதிராக, ஐக்கிய மக்கள் சக்தி, உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளது.

உள்ளுராட்சித் தேர்தலை நடத்த, 2023 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கப்பட்ட நிதியை, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு விடுவிக்காதிருக்க எடுத்த தீரமானத்தின் மூலம், நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பிரதிவாதிகள், பொதுமக்களின் அடிப்படை உரிமையை மீறியுள்ளதாகத் தீர்மானித்து, உத்தரவு பிறப்பிக்குமாறு இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார, இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

அதன் பிரதிவாதிகளாக, நிதி அமைச்சின் செயலாளர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு