“முன்வைத்த காலை ஒருபோதும் பின்வைக்க நாம் தயாரில்லை. தேர்தலைப் பெறும் வரை எமது போராட்டம் தொடரும்.”
– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று ஐக்கிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சஜித் மேற்கண்டவாறு கூறினார்.
அத்துடன், கண்ணீர்ப்புகைக் குண்டுத் தாக்குதலுக்கு தமது அணி அஞ்சவில்லை எனவும், இலக்கை அடையும் வரை போராட்டம் தொடரும் எனவும் சஜித் சூளுரைத்தார்.