நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தைபலியாகியுள்ளார்.
நாவலப்பிட்டி, பவ்வாகம – புதிய தேசிய வீடமைப்பு பகுதியைச் சேர்ந்த 59 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நாவலப்பிட்டியில் இருந்து கொத்மலை நோக்கிப் பயணித்த வான் ஒன்று குறுக்கு வீதியில் நுழைய முற்பட்ட போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அப்போது, குறித்த நபர் வானின் கண்ணாடியில் மோதி கீழே விழுந்து பின்னர் வானில் சிக்கி உயிரிழந்துள்ளார்.