கொக்குதொடுவாய் அகழ்வு பணியின் போது எடுக்கப்பட்ட பச்சைநிற ஆடை

Share

முல்லைத்தீவு கொக்குதொடுவாய் மனிதபுதைகுழி அகழ்வு பணியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் நாள் அகழ்வு பணியானது இன்றையதினம் இடம்பெற்றிருந்தது.

இன்று (06.07.2024) காலை 8.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த அகழ்வு பணியில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன், தொல்பொருள் சிரேஸ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ, வைத்தியர் சுபுண், கிராம சேவையாளர், தடயவியல் பொலிஸார் , விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்டவர்களும் பங்கேற்றிருந்தனர்.

குறித்த பகுதியில் கொக்கிளாய் முல்லைத்தீவு பிரதான வீதியில் காப்பற் இடப்பட்ட பகுதி அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் அதன் கீழ் மனித எச்சங்கள் இருப்பதாக விஷேட ஸ்கான் பரிசோதனையில் தெரிய வந்திருந்தது. குறித்த பகுதிக்கு மேலாக புதிதாக தகர கூடாரம் ஒன்று அமைக்கப்பட்டு மேலதிக மண்கள் வெளியேற்றப்பட்டிருந்தது.

இன்றைய அகழ்வு நடவடிக்கையின் போது பச்சை நிற துணி ஒன்று எடுக்கப்பட்டிருந்தது. நாளையதினம்  விடுமுறை வழங்கப்பட்டு நாளைமறுதினம் திங்கட்கிழமை (08.07.2024) நான்காவது நாள் அகழ்வு பணி தொடர இருக்கின்றது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு