ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையானோர் நாளை தாயகம் திரும்புகின்றனர்

Share

ராஜீவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டில் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகன், ரொபட் பாயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

நாளை காலை 11.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு இவர்கள் மூவரும் வந்தடைவார்கள் என முருகன் சார்பில் வழக்காடிய சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 33 ஆண்டுகள் வரையில் சிறையில் இருந்த குறித்த அனைவரும் 2022 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட நிலையில் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.

சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சாந்தன் நோய்வாய்ப்பட்ட நிலையில் கடந்த மாதம் உயிரிழந்ததை அடுத்து அவரது உடல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு யாழ்ப்பாணத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் ஏனைய மூவரையும் விரைவில் இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்ற நிலையில் மூவரும் இலங்கைக்கு அழைத்துவரப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு