உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியை மைத்திரிபால சிறிசேன நாட்டிற்கு தெரியப்படுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இன்றையதினம்(01) நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்இ
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்கள் அழுத கண்ணீரோடு இப்போதும் காணப்படுகின்றனர். தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தான் அதன் வேதனை தெரியும்.
அதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சிறீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தனக்கு தெரிந்த விடயங்களை இந்த நாட்டுக்கு தெரியப்படுத்துங்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி தொடர்பில் நாங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி தொடர்பில் நீதிமன்றிற்கு தெரிக்கவுள்ளதாக கூறுகின்றார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையிலே எங்களுக்கு உங்களிடம் தான் கூற முடியும்.
இந்த அரசாங்கத்திற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் சூத்திரதாரி யார் என்று வெளிப்படுத்த வேண்டிய ஆர்வமும் அக்கறையும் அரசாங்கத்திடம் இல்லை எனவும் தெரிவித்தார்.