யாழில் அக்குப்பஞ்சர் சிகிச்சைக்கு சென்றவர் உயிரிழப்பு

Share

முகநூலில் பதிவிடப்பட்ட அக்குபஞ்சர் சிகிச்சை தொடர்பான பதிவை நம்பி சென்ற நபரொருவர் கிருமித் தொற்றுக்குள்ளாகி யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளார்.

அச்சுவேலி வளலாய் கிழக்கைச் சேர்ந்த மாணிக்கம் சற்குணராஜா என்ற 64 வயதானவரே நேற்று இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

உயிரிழந்த நபர் முகநூல் விளம்பரத்தை நம்பி யாழ்ப்பாணம் பிறவுண் வீதியில் அக்குபஞ்சர் வைத்தியர் எனக் கூறப்படுவரால் நடத்தப்படும் சிகிச்சை நிலையத்தில் தனது இரண்டு முழங்காலிலுல் ஊசியால் குத்தும் வகையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

இதனை தொடர்ந்து கால்களில் வீக்கம், நோ ஏற்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்கு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவரது உடல்கூற்றுப் பரிசோதனை அறிக்கையில் அக்குபஞ்சர் சிகிச்சை மூலம் முழங்காலில் ஏற்றப்பட்ட ஊசியால் கிருமித் தொற்று ஏற்பட்டு உடல் முழுவதும் பரவலடைந்து உயிரிழப்பு சம்பவித்ததாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

இலங்கையில் அக்குபஞ்சர் சிகிச்சை முறைக்கு எவ்வித பதிவும் இல்லை என்பதுடன் இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்தவர்கள் முகநூலிலோ வேறு எந்த முறையிலுமோ விளம்பரம் செய்ய முடியாதென்பது அடிப்படை விதியாகும்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு