உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரிடம் நாளை (திங்கட்கிழமை) வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலை நடத்தியது யார் என தனக்கு தெரியும் என மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் கருத்து தெரிவித்த நிலையிலேயே அவரிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.