சிவராத்திரியை பகலில் நடத்தவும் பொலிஸார் விடுத்த கட்டளை!

Share

இந்துக்களின் சிவராத்திரியை பகலில் நடத்துமாறு பொலிஸார் கூறுவதை போன்று பௌத்தர்களின் பொசன் தின நிகழ்வை பகலில் நடத்துமாறு பொலிஸாரினால் கூற முடியுமா என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் சபையில் கேள்வியெழுப்பினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போது மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரியை தினத்தை அனுஷ்டிக்க இந்துக்களுக்கு நீதிமன்றம் அனுமதியளித்தபோதும் பொலிஸார்  அதற்கு அனுமதி வழங்க மறுத்தனர்.

வழிபாட்டுக்கு அனுமதித்தால் அங்குள்ள தொல்பொருட்கள் சேதமடையும் என்றால் அனுமதித்துவிட்டு அவற்றுக்கு சேதம் ஏற்படாமல் பொலிஸார் பார்த்திருக்க வேண்டும்.

அத்துடன் அங்கு சிவன் கோயிலே உள்ளது. எனவே தமது கோவிலை இந்துக்கள் சேதப்படுத்த மாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு