இலங்கையில் தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும் வெவ்வேறான நீதியா? கேள்வி எழுப்பும் எம்பி!

Share

இந்த நாட்டிலே தமிழர்களுக்கு ஒரு நீதி சிங்களவர்களுக்கு ஒரு நீதி. இதுதான் அடிப்படை பிரச்சினை என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம்சாட்டியுள்ளார்.

வவுனியா – வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மகாசிவராத்திரி தினத்தன்று இடம்பெற்ற பொலிஸாரின் அராஜகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு – கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் சபையின் பணிகள் சில நிமிடங்கள் தடைபட்டதுடன் சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்படும் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அறிவித்ததையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் போராட்டத்தை கைவிட தீர்மானித்தனர்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவிக்கையில்

தொல்பொருள் திணைக்களத்தின் அடாவடித்தனம் காரணமாக தமிழர்கள் தற்போது கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளனர்.

முறையான விசாரணைக்கு பின்னர் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என நீதியமைச்சர் கூறியுள்ளார்.

ஆனால் இதே தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமான குருந்தூர் மலை போன்ற இடங்களிலேயே இந்த தொல்பொருள் அமைச்சர் பெளத்த பிக்குகளுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

இந்த நாட்டிலே தமிழர்களுக்கு ஒரு நீதி சிங்களவர்களுக்கு ஒரு நீதி. இதுதான் அடிப்படை பிரச்சினை என குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு