24 மணிநேரமும் பொலிஸாருடன் தமிழில் உரையாட புதிய எண் அறிமுகம்!

Share

107 என்ற குறுகிய எண் மூலம் 24 மணி நேரமும் செயல்படும் அவசர அழைப்பு மையம் தமிழ் மொழியில் பொலிஸாருக்கு புகார் மற்றும் தகவல் தெரிவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

மொழிப் பிரச்சனையின்றி அனைவரும் பொலிஸாருக்குத் தகவல்களைத் தெரிவிப்பதை இலகுவாக்கும் நோக்கில் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸின் அறிவுறுத்தலின் பேரில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் தலைமையில் அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க மற்றும் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இந்த அழைப்பு நிலையம் அண்மையில் ஸ்தாபிக்கப்பட்டது.

வவுனியா, மன்னார் பிரதேசங்களில் குற்றச்செயல்கள் மற்றும் வன்முறைகளுக்கு அஞ்சாமல் மக்கள் நம்பிக்கையுடன் வாழக்கூடிய அமைதியான சூழலை உருவாக்குதல் என்ற தொனிப்பொருளில் பொது மக்களுக்கு தெளிவுபடுத்தும் விசேட வேலைத்திட்டமும் இடம்பெற்றது.

இதன் மூலம் இலங்கையில் எங்கிருந்தும் 107ஐ அழைத்து தமிழ் மொழியில் தகவல்களை வழங்குவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் சிங்களவர், தமிழர், முஸ்லிம் என இன வேறுபாடின்றி அனைத்து இலங்கையர்களுக்கும் சட்டத்தின் பாதுகாப்பை வழங்குவதே தமது நோக்கமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு