பசறை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் ஆரம்பப்பிரிவு மணவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக இன்று பிற்பகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 4 மாணவிகளும், 4 மாணவர்களும் அடங்குவதாக பசறை மாவட்ட வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பாடசாலையின் ஆரம்ப பிரிவு மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக நமுனுகுல – கனவரெல்ல பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் உணவு ஒவ்வாமை காரணமாக 9 மாணவர்கள் இன்று காலை பசறை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.