வெடுக்குநாறிமலை வழக்கு தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

Share

வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேருக்கும் தொல்பொருட்களை சேதமாக்கிய குற்றச்சாட்டில் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த 08 ஆம் திகதி வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் மகாசிவராத்திரி பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

குறித்த 8 பேரையும் வவுனியா நீதவான் நீதிமன்றில் நெடுங்கேணி பொலிசார் கடந்த 9 ஆம் திகதி மாலை முன்னிலைப்படுத்தினர்.

இவர்கள் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் இன்று வவுனியா நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள போது எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் மற்றும் சட்டத்தரணிகள் கிறிஸ்ரினா, ஜிதர்சன், சஜித்தா, சாருகேசி, விதுசினி, கீர்த்தனன், சுகாஸ், திருவருள், ஸ்ரீ காந்தா, யூஜின் ஆனந்தராஜா, கொன்சியஸ் ஆகியோர் இவர்கள் சார்பாக வாதாடியமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு