உயர்தர மாணவர்களுக்கான கல்விசார் பயிற்சி திட்டங்கள் ஆரம்பம்

Share

இந்த வருடம் (2024) க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு ஆங்கிலம்இ தகவல் தொழில்நுட்பம் மற்றும் வழிகாட்டல் பயிற்சிகளை வழங்கும் நாடளாவிய வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டது.

இந்த வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய 25,000 மாணவர்கள் இந்தத் திட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று முதல் நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 300 நிலையங்களில் பயிற்சி நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் தலைமையில் மஹரகம மத்திய மகா வித்தியாலயத்தில் இந்த வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டது.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் ஆரம்பமாவதற்கு முன்னர் இந்தப் பயிற்சித் திட்டங்கள் நிறைவடையும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வருடம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு பயிற்சித் திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு