சாந்தனின் வித்துடல் தாங்கிய ஊர்திப்பவனி வல்வெட்டித்துறையை சென்றடைந்ததுடன் அங்கிருந்து ஆலடி வீதியூடாக தமிழீழத் தேசியத் தலைவரின் பூர்வீக இல்லம் அமைந்திருந்த வளாகத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
குறித்த இடத்தில் மக்கள் உணர்வுபூர்வமாக தமது அஞ்சலியை செலுத்தியருந்தனர்.
இதேவேளை இறுதி ஊர்வலமானது பொலிகண்டி வீதியூடாக எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தை அடைந்து அங்கு சாந்தனின் வித்துடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.