முல்லைத்தீவு கல்வி வலயத்திற்குட்பட்ட மு/செம்மலை மகா வித்தியாலயத்தில் முதல்வர் யோகேஸ்வரன் அவர்களின் தலைமையில் குமுழமுனையினை பிறப்பிடமாக்கொண்டு தற்பொழுது கனடாவில் வசித்து வருகின்ற கந்தசாமி பத்மநாதன் அவர்களின் முற்றுமுழுதான அனுசரனையில் மகேஸ்வரன் குமுதன் அவர்களின் ஒழுங்குபடுத்தல்களுடன் இன்று (01.03.2014) மிக சிறப்பான முறையில் நடைபெற்றது.
ஆண்களுக்கான வீதியோட்டமானது சிலாவத்தை சந்தியிலிருந்து ஆரம்பமாகியதுடன் அதனை அனுசரனையாளரின் சகோதரன் கந்தசாமி புலேந்திரராசா(ஓய்வு பெற்ற அதிபர்)அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.
அத்துடன் பெண்களுக்கான நிகழ்வானது உடுப்புக்குளம் சந்தியில் ஆரம்பமாகியதுடன் அதனை வி.நவனீதன்( ஐ.நா அதிகாரி) அவர்கள் ஆரம்பித்து வைக்க போட்டிகள் இனிதே ஆரம்பமாகின.
ஆண்களுக்கான போட்டியில் முதலாமிடத்தினை வசந்தராசா தர்சன், இரண்டாமிடத்தினை ரஜனிகாந் சரன், மூன்றாமிடத்தினை அரசரட்னம் டினோசன் பெற்றுக்கொள்ள பெண்களுக்கான போட்டியில் முதலாமிடத்தினை சிவகுமார் டிலைக்சிகா, இரண்டாமிடத்தினை வசந்தன் தரன்யா, மூன்றாமிடத்தினை அன்ரனியாஸ் அஸ்வினி ஆகியோர் தங்கள் வசப்படுத்தி வெற்றியை பெற்றுகொண்டார்கள்.
இவ் வீதியோட்டத்தினை மேலும் வலுச்சேர்க்கும் முகமாக அளம்பில் 24 வது சிங்க இராணுவ படையணியினர் நீர் வசதியினை வழங்க செம்மலை உதயசூரியன் விளையாட்டுக்கழகத்தினர் வீதியோட்டத்திற்கான ஆதரவினை வழங்கியுதவினார்கள்.
இந்நிகழ்வில் ஐ.நா அதிகாரி, கிராம சேவகர், கிராம மட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பழைய மாணவர்கள் மற்றும் கிராமத்தவர்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.