கல்வியற் கல்லூரிகளில் பயிற்சி பெறும் ஆசிரிய மாணவர்களின் உணவுக்கொடுப்பனவு அதிகரிப்பு

Share

தேசிய கல்வியற் கல்லூரிகளில் பயிற்சி பெறும் ஆசிரிய மாணவர்களின் உணவுக்கான கொடுப்பனவை அடுத்த மாதம் முதல் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்பெரும நாடாளுமன்றில் இன்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் எழுப்பிய வினாவுக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த விடயத்தை தெரிவித்தார்.

கல்வியற் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு 10 ஆயிரம் ரூபா கடன் பெறுவதற்கான யோசனை ஒன்று ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்டது. எனினும் அதற்கு மாணவர்கள் விருப்பம் தெரிவித்திருக்கவில்லை. இந்தநிலையில் அவர்களுக்கான உணவுக்கு தற்போது வழங்கப்படும் கொடுப்பனவை 5 ஆயிரம் ரூபாவில் இருந்து 8 ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதற்கான யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டது.

கடந்த வாரத்தில் அதற்கு நிதி பற்றிய குழு அனுமதி வழங்கியதுடன் நேற்றைய தினம் அதனை உறுதிப்படுத்தியது.

இதற்கமைய 8000 ரூபா கொடுப்பனவு அடுத்த மாதம் முதல் கல்வியற் கல்லூரிகளில் பயிற்சி பெறும் ஆசிரிய மாணவர்களுக்கு வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு