மின்சார கட்டணம் முன்னர் குறிப்பிட்ட தொகையை விட அதிகமாக குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் தெரிவித்தார்.
இதேவேளை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் அவர்கள் முடிவெடுப்பார்கள் எனவும் நாடாளுமன்றில் அமைச்சர் கூறினார்.
மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் பொது பயன்பாட்டு ஆணையத்திடம் தங்கள் முன்மொழிவை அளித்திருந்தோம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.