இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்த யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றம் இன்று மதியம் தடையுத்தரவை விதித்துள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இன்று நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டது.
இதேவேளை இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்துவதற்கு திருகோணமலை மாவட்ட நீதிமன்றமும் இன்று இடைக்கால தடைவிதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.