கம்பஹாவில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி நிதி மோசடிகளில் ஈடுப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் கணினி குற்றப்பிரிவினரால் சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் பல்வேறு தரப்பினரிடம் இவ்வாறு நிதி மோசடியில் ஈடுபட்டதாக கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர்கள் கம்பஹா – வேபட பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்த தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம், தொலைபேசி என்பன குற்றவியல் விசாரணை திணைக்களத்தினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.