இலங்கையில் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை காப்பு சட்டமானது மனித உரிமைகளுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த சட்டத்தின் மூலம் கருத்துகளை வெளிப்படுத்தும் உரிமை தடுக்கப்படலாமென பேரவையின் X பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிகழ்நிலை காப்பு சட்டத்தின் ஊடாக சிவில் சமூகத்திற்கும், கைத்தொழில் உள்ளிட்ட துறைகளுக்கும் ஏற்படும் தாக்கம் குறித்து பரிசீலிக்க வேண்டுமென இலங்கை அரசாங்கத்திடம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.