அபிவிருத்தி வேலை திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம்

Share

அபிவிருத்தி வேலை திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடலானது இன்றைய தினம் (18) மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் காலை 9 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் 2023ம் ஆண்டு நடைபெற்று முடிந்த அபிவிருத்தி வேலை திட்டங்களின் முன்னேற்றங்கள் பற்றியும் அவை தொடர்பான பிரச்சினைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. மேலும் 2024ம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் அவற்றை எவ்வாறு சிறப்பான முறையில் மேற்கொள்வது என்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இக்கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் சி. குணபாலன், பிரதம உள்ளக கணக்காய்வாளர், க.லிங்கேஸ்வரன், சமுர்த்தி பணிப்பாளர் M. முபாரக், பதில் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. க.ஜெயபவானி, பிரதேச செயலாளர்கள், கணக்காளர்கள், உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

https://youtu.be/SN92XmcdSbU?si=d9lUgLibl9nXHJ4E

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு