போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கில் நாட்டில் முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதம் கடந்துள்ளது.
இந்த சுற்றிவளைப்புகளின் ஊடாக இதுவரை 40,590 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் இன்று முற்பகல் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனை குறிப்பிட்டார்.
அத்தோடு கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி 4,791 மில்லியன் ரூபா என மதிப்படப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களின் 725 மில்லியன் ரூபா சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
https://youtu.be/SN92XmcdSbU?si=Iq9xM-lpwrNpkCxw