முகக்கவசம் அணியுமாறு மக்களை அறிவுறுத்திய நாடு!

Share

ஸ்பெயினில் காய்ச்சல், கொரோனா மற்றும் ஏனைய சுவாச நோய்கள் அதிகரித்து வருவதால், அனைத்து மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் முகக்கவசங்கள் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மருந்தகங்கள் மற்றும் ஏனைய இடங்களில் முகக்கவசங்களின் பயன்பாடு நிறுத்தப்பட்டு ஆறு மாதங்கள் கடந்த நிலையில் மீண்டும் முகக்கவசங்களை அணியுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஸ்பெயினின் சில மாகாணங்களிலும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டின் இறுதி வாரத்தில் 75 சதவீதமானோர் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தற்போது காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு