மின் கட்டணம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்!

Share

மின்கட்டண திருத்தம் தொடர்பான யோசனை இதுவரை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு முன்வைக்கப்படவில்லை எனவும் எதிர்வரும் வாரமளவில் யோசனை முன்வைக்கப்படும் என மின்சாரம் மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

பொது மக்களின் கருத்து கோரலுடன் மின்கட்டண திருத்தம் தொடர்பில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இறுதி தீர்மானத்தை எடுக்கும் வல்லமையை கொண்டிருக்கும்.

நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற அமர்வின் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்

மொத்த சனத்தொகையில் வீட்டு மின்பாவனையாளர்கள் உட்பட 76 இலட்சத்து 3923 மின்பாவனையாளர்கள் அரச மற்றும் தனியார் மின்விநியோக கட்டமைப்பின் ஊடாக மின்சாரத்தை பெற்றுக்கொள்கிறார்கள்.

பொருளாதார பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் மின்கட்டணம் செலுத்தாத 10 இலட்சத்து 64 ஆயிரத்து 400 மின்பாவனையாளர்களின் மின்கட்டணம் துண்டிக்கப்பட்டுள்ளது.

மின்கட்டண திருத்தம் தொடர்பான யோசனை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு முன்வைக்கப்படவில்லை. எதிர்வரும் வாரமளவில் யோசனை முன்வைக்கப்படும். பொது மக்களின் கருத்து கோரலுடன் மின்கட்டண திருத்தம் தொடர்பில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இறுதி தீர்மானத்தை எடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு