மறைந்த நடிகரும், தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் தலைவருமான கப்டன்.விஜயகாந்த் அவர்களுக்கான நினைவுவணக்க நிகழ்வு, அம்பாறை மாவட்டம், காரைதீவுப் பகுதியில் இன்றைய தினம் நடைபெற்றது.
இவ்வஞ்சலி நிகழ்வானது காரைதீவு பிரதேச சபையின் முன்னால் தவிசாளர் கி.ஜெயசிறில் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மற்றும் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், பா.அரியநேந்திரன், சீ.யோகேஸ்வரன் மற்றும் கட்சியின் தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.