தாய்த்தமிழக தொப்புள் கொடியான் விஜயகாந்த் – மனோ கணேசன்

Share

இலங்கையில் வாழுகின்ற தமிழர்கள் மத்தியில், எம்மை நேசித்த, எமக்காக தமிழ் திரையுலகை அணி திரட்டிய, மதுரை மண்ணுக்கே உ ரிய வீரத்தமிழனாய் எமக்காக குரல் எழுப்பிய  “தாய்த்தமிழக தொப்புள் கொடியான்”என உணரப்பட்டவர், திரு. விஜயகாந்த் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தமிழக தேதிமுக தலைவர், நடிகர் விஜயகாந்த் மறைவு தொடர்பில், மனோ எம்பி மேலும் கூறியதாவது,

திரு. விஜயகாந்த், தமிழ்நாட்டு திரை வானிலும், பின் அரசியல் வானிலும் சூறாவளியாக எழுந்தார். இடையில் திடீரென அமைதி தென்றலானார்.

புரட்சி கலைஞர் என்ற தமிழ் நடிகர், தேதிமுக தலைவர் என்ற எழுச்சி  அரசியலர் என்ற பிரபல அடையாளங்களை மீறி சிறந்த மனிதர் என ஒட்டுமொத்த தமிழுலகில் அறியப்பட்டார்.

கடல் கடந்து இலங்கையில் வாழுகின்ற தமிழர்கள் மத்தியில், எம்மை நேசித்த, எமக்காக தமிழ் திரையுலகை அணி திரட்டிய, மதுரை மண்ணுக்கே உ ரிய வீரத்தமிழனாய் எமக்காக குரல் எழுப்பிய  “தாய்த்தமிழக தொப்புள் கொடியான்”  என உணரப்பட்டவர், திரு. விஜயகாந்த்.

தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக,  ஒட்டுமொத்த இலங்கை வாழ் தமிழர்களின்  அஞ்சலிகளை தெரிவித்து கொள்கிறேன். அவரது குடும்பத்தாருக்கும், அவரது தேதிமுக கட்சியினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு