14 வயது சிறுமியுடன் ஏற்பட்ட காதலை தொடர்ந்துஇ அவரை விகாரையில் நான்கு நாட்கள் தடுத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் கம்பஹா – மீரிகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
கம்பஹா மீரிகம பிரதேசத்தில் 16 வயதான பிக்குவுக்கும் 14வயது சிறுமிக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில்இசிறுமியை விகாரைக்கு அழைத்து சென்ற பிக்கு அங்கு அவரை 4 நாட்கள் தடுத்து வைத்துள்ளார்.
இது தொடர்பில் சிறுமியின் பெற்றோர் பொலிசாருக்கு அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் பிக்குவை பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பிக்கு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் அவரை ஜனவரி 4ஆம்திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு அத்தனகல நீதிவான் உத்தரவிட்டார்.